பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 179

கூறுகிறோம், வஞ்சகத்துக்கு வாழ்த்துக் கூறுகிறோம், வாய்மையற்றக் கயமைக்கு வாழ்த்துக் கூறுகிறோம் என்பனவற்றையெல்லாம் அவை கண்டனவா, என்ன? தமிழ், தமிழ், தமிழ்! - தமிழின் பேரால் பஞ்சமாபாதகங் களென்ன, தசமகா பாதகங்கள் செய்தாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொள்ளத்தயார்; காதைப் பொத்திக் கொள்ளத்தயார்! அத்தகைய குருடர்களுக்கும் செவிடர்களுக்கும் நடுவே நின்று, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி நாங்கள் முதல் நாள் எடுக்கவேண்டிய ‘வாந்தி'யை எடுத்துவிட்டு, எங்களுடைய அறைக்குத் திரும்பினோம் - வாந்தி என்றால் என்னமோ, ஏதோ என்று நினைத்துவிடாதே; அந்தக் காலத்துப் புலவர் பெருமக்கள் பலனை எதிர்பாராமல் பாடிவைத்த பாடல்களைப் பட்டம் பெறும் நோக்கத்துடனும் பதவி பெறும் நோக்கத்துடனும் படித்து, பணம் திரட்டும் நோக்கத்துடனும் புகழ் திரட்டும் நோக்கத்துடனும் படித்த முட்டாள்க'ளுக்கிடையே தாங்கள் உண்ட தமிழ் உணவைச் செரித்தும் செரிக்காமல் இருக்கும்போதே எடுக்கும் வாந்தி'யைத்தான் சொல்கிறேன் - என்ன இருந்தாலும் நாங்கள் எடுத்த வாந்தி’ ‘தமிழ் வாந்தி’ யல்லவா?

எனவே அதை ஒரு வாரம் தொடர்ந்து எடுக்கச் சொல்லியிருந்தார்கள் கல்கத்தா தமிழர்கள். அந்த ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கழித்து விட்டுத்தான் அன்று நாங்கள் எங்களுடைய அறைக்குத் திரும்பிக் கொண்டி ருந்தோம். அப்போதுதான் உன்னுடைய அண்ணா அங்கே வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும், வாப்பா, வா! உன்னைத்தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!! என்றார் பேராசிரியர். தனக்கே உரித்தான தனி அமைதியுடன். அவனேப் புயல்வேகத்தில் அதை மறுத்து,