பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 விந்தன்

‘அவனை நீங்கள் பார்த்தீர்களா?” “ஆமாம், கல்கத்தாவில் பார்த்தேன்’ ‘சென்னையில்: ‘

‘இல்லை. இன்னும் நான் அவனைப் பார்க்கவில்லை; நீ பார்த்தாயா?”

‘பார்த்தேன்; ஆனால்...’ “ஆனால் என்ன?” ‘தன்னினைவோடு அவன் இங்கே வரவில்லை...’

‘அதனாலென்ன? அந்தமட்டும் கடவுள் அவனைக் காப்பாற்றினாரே, அதுவே போதும் எனக்கு!’

‘ஏன், என்ன நடந்தது அங்கே?’ ‘அதை ஏன் கேட்கிறாய்? - அந்தப் பாவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி நானும் கல்கத்தாவுக்குப் போயிருந்தேன். அங்கே தமிழின் பேரால் இருவரும் அளவுக்கு மீறிக் கெளரவிக்கப்பட்டோம். எங்களுடைய சொந்தவாழ்க்கையைப் பற்றி அங்கே உள்ளவர்களுக்கு என்ன தெரியும்? அப்படியேத் தெரிந்தாலும் பிறருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதே பண்பென்றும், பொதுவாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது பண்பென்றும் சொல்லி நாங்கள் தான் முன்கூட்டியே பண்பென்னும் பட்டுத்திரைக்குப் பின்னால் ஒளிந்துக்கொண்டு விடுகிறோமே 9 அந்தப்பட்டுத் திரையை விலக்கிப்பார்க்காத - ஏன், அதை எப்போதுமே விலக்கிப்பார்க்க விரும்பாத - அங்குள்ள ‘பைத்தியங்கள் எங்களைக் கண்டதும், வாழ்க வாழ்க!” என்று வாயார வாழ்த்தி, மனமாற வரவேற்றன.

பாவம், அப்படி வாழ்த்தும்போது பொய்மைக்கு வாழ்த்துக் கூறுகிறோம், போலிப் புலமைக்கு வாழ்த்துக்