மனிதன் மாறவில்லை 181
நாட்கள் பழகிய தோஷத்தின் காரணமாக அவருடைய பிறப்பிலேயே ஐயப்பாடு கொண்டவள் நான்!- ஆம். அந்தக் ‘குள்ள நரிக் குணம் அசல் தமிழனுக்குப் பிறந்திருந்தால் அவருக்கு இருந்திருக்குமா என்பது இன்றுவரை எனக்கு ஐயப்பாடு டையதாகவே இருந்துவருகிறது. ஆனால் அதைப்பற்றி இப்போது எண்ணி என்ன பயன்? - நடந்தது நடந்து விட்டது; இனி நடந்ததை வைத்துக்கொண்டுதான் இனிமேல் நடக்க வேண்டியவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அந்த விபத்து - ஆம், பேராசிரியரால் சிருஷ்டிக்கப்பட்ட அந்த விபத்து - ஒரு வாரத்துக்குப் பிறகு நாங்கள் கல்கத்தாவிலிருந்து திரும்பியபோது நிகழ்ந்தது.
முதலில் அது உன்னுடைய அண்ணனுக்காகச் சிருஷ்டிக்கப் படவில்லை; எனக்காகவே சிருஷ்டிக்கப் பட்டது. ஏன் தெரியுமா? - நான் கெட்டாலும நீயாவது வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் உன்னை நான் அவருடைய கழுத்தில் வேண்டாவெறுப்பாகக் கட்டி வைக்க முயன்றேனல்லவா, அதற்காக! அதற்காகவேதான் அவர் என்னையும் கல்கத்தாவுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் என்ற விஷயமும் எனக்கு அப்போது தெரியாது. ஆகவே ஒடும் ரயிலில் உட்கார்ந்தபடி தமிழன் தெலுங்கனிடம் தண்ணீர்ப்பிச்சை கேட்டானே, தெரியுமா உனக்கு? என்று அவர் என்னைக் கேட்ட போது, ‘தெரியுமே! கோதாவரி, கிருஷ்ணாவிலிருந்து கொடுக்கச் சொன்னானே, அதைத் தானே சொல்கிறீர்கள்?’ என்றுநான் கேட்டு வைத்தேன்.
ஆம் அந்த புண்ணிய நதிகளைத்தான் இப்போது நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். என்னமோ, போகும் போது தான் அவற்றைப் பார்க்கக் கொடுத்துவைக்க வில்லை என்றாலும், இப்போதாவது பார்த்து