பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 விந்தன்

வைப்போமே? என்றார்.அவர். ‘பார்த்து வைப் போமே! என்றேன் நான். சரிவா’ என்று அவர் என்னை அழைத்துக் கொண்டே சென்று கதவருகே நின்றார்; நானும் அவருக்குப் பக்கத்தில் போய் நின்றேன். வண்டி பாலத்தைக் கடக்க ஆரம்பித்தது தான் தாமதம்; என்னுடைய காலை யாரோ வாரி விடுவது போலிருந்தது - திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்; ‘ஒன்று மில்லை, இட வசதிக்காக இந்தப் பெட்டியைக் கொஞ்சம் நகர்த்தினேன்; கை பட்டுவிட்டது!” என்றார் பேராசிரியர், எனக்குப் பின்னாலிருந்த பெட்டியை நகர்த்திக்கொண்டே ஒஹோ!’ என்று நான் கைப்பிடியை இன்னும் கொஞ்சம் கெட்டியாகப்பற்றி, அவர் மேல் ஒரு கண் வைத்தேன். நான் நினைத்தது சரி; மறுமுறையும் அவர் என்னுடையக் காலைவாரிவிட முயன்றார் - அவ்வளவுதான்: அட பாவி, இதற்குத்தானே நான் வரமறுத்துங்கூட என்னை நீ வற்புறுத்தி அழைத்துவந்தாய்?” என்று நான் கதறி விட்டேன். இதைக்கேட்டதும் அரைத்துக்கத்தில் இருந்த உன் அண்ணா எழுந்து, ‘என்னம்மா, என்ன நடந்தது?’ என்று கேட்டுக்கொண்டே என்னை நோக்கிவந்தான்.

அப்போது கொஞ்சங்கூடக் கலங்காமல் கலகலவென்று நகைத்தபடி என்ன படித்து என்ன பயன்? பெண்பிள்ளை பெண்பிள்ளைதான் என்பதைக் காட்டிவிட்டீர்களே?’ என்று சொல்லி என் வாயை அடக்கிவிட்டு, இங்கே வா கீழே ஒடும் நதியைப் பார்க்கவேண்டும் என்பதற்காக இவர்கள் இங்கே வந்து நின்றார்கள்!’ என்ற நான் நின்ற இடத்தில் உன் அண்ணனை இழுத்து நிற்கவைத்துவிட்டு, “இதோ பார், உனக்குப் பின்னாலிருக்கும் இந்தப் பெட்டியை இடவசதிக்காக நான் இப்படிக் கொஞ்சம் நகர்த்தினேன்!’ என்று சொல்லிக்கொண்டே, அந்தக் கிராதகன் அவனுடைய காலை வாரிவிட்டுவிட்டான்; அரைத்துக்கத்தில் இருந்த அவனோ நடந்தது இன்னதென்பதைக் கூட அறியாமல்