பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 191

தான்; அவன் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒர் அறை அறைந்து, ‘அட பாவி என் தாயைத் தீர்த்துக்கட்டி, அடுத்தாற்போல் என் குழந்தையையும் தீர்த்துக்கட்டி, அதன் மூலம் என்னைக் கொண்டே என்னையும் தீர்த்துக்கட்டிவிடலாம் என்று நினைத்தாயா? - அதுதான் நடக்காது! - போ போ வெளியே! என்று பொங்கி எழுந்தேன் நான்.

‘உண்மைக்கு இந்த உலகத்தில் இடமில்லை, உண்மைக்கு இந்த உலகத்தில் இடமில்லை!’ என்று உளறிக்கொண்டே, அந்த நரிப்பயல் நழுவினான்.

அதற்குப் பிறகாவது என் கண்மணிக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லாமலிருந்ததா என்றால், அதுதான் இல்லை. அந்தக் கிராதகனுக்கு அடுத்தாற்போல் என் பாட்டி அதைத் தீர்த்துக் கட்டப் பார்த்தாள்; அவளிடமிருந்தும் அதைக் காத்த பிறகு, தான் மேலே என்ன செய்வதென்று தோன்ற வில்லை, எனக்கு.

இந்த நிலையில்தான் வழுக்கி விழுந்த எனக்குக் கூட வாழ்வளிக்கத் துணிந்த திரு.ராமமூர்த்திக்குப் பெங்களூரில் திருமணம் என்ற செய்தியும், அந்தத் திருமணத்தையொட்டி அவர் வீட்டு மாடியில் குடியிருந்த அந்தச் சமுதாய விரோதி அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டான் என்ற செய்தியும் என் காதில் விழுந்தன. அத்துடன், திரு ராமமூர்த்தி தம்பதிகளால் என் குழந்தை நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையும் பிறந்தது, என் உள்ளத்தில். ஆகவே அவர் தம் புதுமனைவியுடன் புதுமனை புகுந்ததும் நான் அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதிக் குழந்தையின் அரைஞாண் கயிற்றில் செருகி, அதைக் கொண்டுபோய் அவருடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் கிடத்திவிட்டுத் திரும்பினேன். அதற்குப் பிறகு நான் இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லையென்றாலும், என்னால் அந்தச் சதிகாரன் சட்டத்தின் பிடியில் சிக்கிச்