பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 விந்தன்

ஆத்திரப்படாதே, நறுமணம்! அவன் போனதால் எனக்கு என்ன நன்மை, அவனுக்குத்தான் நன்மை. தன்னினைவை இழந்துவிட்ட ஒருவன் இந்த உலகத்தில் இருப்பதும் ஒன்றே; இல்லாமற் போவதும் ஒன்றே!’ என்றார் அவர்.

‘யார் போனால் என்ன, நீ இருந்தால் போதாதா?” என்றேன் நான்.

‘இவ்வளவு தூரம் என்னை நீ வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இப்போதுகூட ஒன்றும் நடந்துவிடவில்லை நறுமணம் எனக்காக நீ ஒரு சிறு தியாகம் - ஆம், ஒரே ஒரு சிறு தியாகம் செய்தால் போதும்; நாளைக்கே ஒருமனப் பட்ட நாம் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு விடலாம்!” என்றார் அவர், என் தலையை லேசாகத் தடவி.

4.

உடனே, என்ன தியாகம் செய்யவேண்டும், சொல்லுங்கள்?’ என்று நான் அவரை முந்திக்கொண்டு கேட்பேன் என்று அவர் அந்த நிலையிலும் எதிர் பார்த்தாரோ என்னமோ, தலையைத் தடவுவதை விட்டுவிட்டு என்னுடைய முகத்தைத் தூக்கிப் பார்த்தார். எந்தவிதமான உணர்ச்சிபேதமும் அதில் காணாமற் போகவே, ‘நம்மைப் போல் உணர்ச்சி வசப்பட்டு விட்டவர்கள் நாலு பேருக்கு அஞ்சிச் சர்வசாதாரணமாகச் செய்யும் தியாகம்தான் அது; இதோ.பார்!” என்று தன் சட்டைப் பையிலிருந்த ஒரு பிளாஸ்டிக் குழந்தைப் பொம்மையை எடுத்தார்; சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு, தன் கையிலிருந்த குழந்தைப் பொம்மையின் தலையைத் திருகி, அதைத் தொங்கவிட்டு விட்டு, ‘இவ்வளவுதான்! இதை நீ செய்துவிட்டால் போதும்; நாளைக்கே நடந்து விடும் நம் திருமணம்’ என்று சொல்லிக்கொண்டே, என் மடியில் கிடந்தக் குழந்தையைப் பார்த்தார் - அவ்வளவு