பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 189

வாயிலாகக்கேட்டு வருந்தாமல் இருந்துவிட்ட நான், இந்தச் சம்பவத்தைக் கேட்டும் வருந்தவில்லை; வாயை மூடிக்கொண்டிருந்தேன். ‘அதுதான் - அந்தப் பாட்டு இருக்கிறதே, காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்!” என்ற பாட்டு - அந்த இழவெடுத்த பாட்டைப் பாடிக் கொண்டே உன் அண்ணன் கடற்கரையோரமாக வந்தான். வந்தவன் திடீரென்று நின்று, அதோ என் நறுமணம்! அதோ, என் நறுமணம் என்று அலைமோதும் கடலைச் சுட்டிக்காட்டி அலறினான். நான் திடுக்கிட்டு எழுந்துநின்று அவன் சுட்டிக்காட்டிய திசையை நோக்கினேன். கட்டுமரத்தில் சென்று கொண்டிருந்த யாரோ ஒரு மீனவன் கடலில் அமிழ்வதும், அமிழ்ந்து பின் எழுவதுமாகப் போய்க் கொண்டிருந்தான். இந்தப் பைத்தியக்காரன், சும்மா இருந்திருக்கக்கூடாதா? போய்விட்டாயே! என்று கத்திக் கொண்டே கடலில் குதித்துவிட்டான்’ அவ்வளவுதான், என்னையும் அறியாமல், அப்புறம்?’ என்று கேட்டுக் கொண்டே நான் அவரை நோக்கித் திரும்பினேன்.

‘நேற்று இரவிலிருந்து இன்று மானில வரை நான் அவனை வலைபோட்டுத் தேடியதுதான் மிச்சம்; ஆள்கிடைக்க வில்லை - எந்த மீனுக்கு இரையாகி விட்டானோ, என்னமோ!’ என்றார் அவர், என்மேல் இரண்டு சொட்டுக் கண்ணிரை உதிர்த்துக்கொண்டே.

அதற்குமேல் என்னால் தாங்கமுடியவில்லை; அருகி லிருந்த சுவரில் முட்டிக்கொண்டும் மோதிக் கொண்டும் அழ ஆரம்பித்துவிட்டேன்.

‘ஒரு விதத்தில் அவன் அப்படிப்போனது நல்லது தான்!’ என்றார் அவர், சிறிது நேரத்துக்குப் பிறகு ‘யாருக்கு, உனக்குத்தானே?’ என்றேன் நான், ஆத்திரத்துடன்.