பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 விந்தன்

வாழவைப்பதற்காக என்னுடைய வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த சிசுவையே கொல்லத்துணிந்துவிட்டாள்!

அதற்கு இடம் கொடாத நான், இதற்கும் இடம் கொடுக்கவில்லை. எதற்குமே தன்னைத்தானே தியாகம் செய்துகொள்வதுதானே பாரதப் பெண்களின் மரபு? அந்த மரபையொட்டி என்னை நானேத் தியாகம் செய்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை ஏற்படுத்தி வைப்பது என்று நினைத்தேன். ஆனால் அதற்கும் குறுக்கே நின்றது அந்தச் சிசு-ஆம், அதற்குக் காரணமாயிருந்த பேராசிரியரை வெறுத்தாலும் அதை நான் நேசித்தேன்!

ஏனெனில், அன்று எப்படியிருந்தாலும் இன்று நான் ஒரு தாயல்லவா? - தாய் சில சமயம் பேயாவதும் இந்த உலகத்தில் உண்டுதான் என்றாலும், நான் பேயாக விரும்பவில்லை - எனவே எந்த விதமான விக்கினமு மின்றி அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தேன், நான்!

அன்றிரவு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகப் பேராசிரியர் வந்தார். வந்தவர், வழக்கம்போல் ஒரு குறை அழுதுத் தீர்த்துவிட்டு, ‘எல்லாம் அந்தக் கண்ணகியால் வந்தவினை இல்லாததும் பொல்லாததும் சொல்லி, அவள் உன்னை என்னிடமிருந்து பிரித்து, வெகு தூரத்துக்கு அப்பால் இழுத்துக்கொண்டு போய்விட்டுவிட்டுப் போய் விட்டாள்-அதனாலென்ன !’ என்று சொல்லிவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பிறகு, ‘மனத்தைத் திடப் படுத்திக்கொள் நறுமணம், மனத்தைத் திடப்படுத்திக் கொள்!"என்றார் அவர். ‘ஏன், எதற்கு?’ என்று நான் கேட்பேன் என்று அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ, நான் கேட்கவில்லை. ‘நேற்றிரவு கடற்கரையில் ஒரு வருந்தத் தக்க சம்பவம்’ என்றார் அவர்.மீண்டும் இதற்குமுன் எத்தனையோ வருந்தத்தக்க சம்பவங்களை அவர்