பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை . 197

இதிலிருந்த ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொண்டாயா, o...

‘என்ன வித்தியாசம்?” ‘அடித்தட்டிலுள்ள பெண்களுக்கும் மேல் தட்டிலுள்ள பெண்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது! என் குருநாதரைப் போன்றக் காமுகர்களிடமிருந்து தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடிகிறது, அடித் தட்டிலுள்ள பெண்களால்; மேல்தட்டிலுள்ள பெண்களால் அவ்வாறு காத்துக்கொள்ள முடிவதில்லை - இது ஏன்? கல்விதான் காரணமாயிருக்குமோ?”

‘கல்வியல்ல; கல்வி முறை’ ‘நீ சொல்வது சரி - ஆனால் அதை எங்கே மாற்றியமைக்கிறார்கள்? அதற்குப் பதிலாகத்தான் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களை மாற்றி யமைத்துக் கொண்டு வருகிறார்களே

‘அதனால்தான் குரு பத்தினியையே கல்யாணம் செய்து கொள்ளக்கூட நீங்கள் துணிந்துவிட்டீர்கள் போலிருக்கிறது!”

‘அதையும் சொல்லிவிட்டாளா, அவள்?” ‘சொன்னாள் - ஆனால் எந்தவிதத்தில் தெரியுமா? உங்களைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு தெய்வமாகக் கொண்டாடும் விதத்தில்!”

‘போகட்டும்; அந்த மட்டும் உனக்கு முன்னால் என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் இருந்தாளே, அதைச் சொல்லு!”

‘உங்களையாவது, அவள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாவது! உங்கள் மேல் யாராவது ஏதாவது சொன்னால் அவர்களுடைய நாக்கு அழுகிப்போகும் என்றல்லவா அவள் சொல்லுகிறாள்!"