பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 விந்தன்

ராமமூர்த்தி, தன் கண்களில் துளிர்த்த நீரை அவளுக்குத் தெரியாமல் மறைக்க முயன்றுகொண்டே.

இதைக்கேட்டதும், ‘அவன் எங்கே இருக்கிறான், இப்போது அவனையும்தான் அந்தப் பாவி தொலைத்து விட்டானே!"என்றாள் நறுமணம், அவனைப் பார்க்காமல் வேறு எங்கோப் பார்த்துக்கொண்டே.

‘பைத்தியமா, உங்களுக்கு? அவர் பத்திரமாக இருக்கிறார்!” என்றான் ராமமூர்த்தி.

“எங்கே இருக்கிறார்?’ என்றாள் நறுமணம், சட்டென்று அவன் பக்கமாகத் திரும்பி.

“அவருக்குத் தக்க டாக்ட்ர் ஒருவர் நடத்தும் நர்ஸிங் ஹோமில்!”

‘அப்படியா, டாக்டர் என்ன சொன்னார்?’ என்று கேட்டாள் அவள், பரபரப்புடன்.

‘அதிர்ச்சிதான் காரணம், வேறொன்றுமில்லை; விரைவிலேயே தெளிந்துவிடுமென்று சொன்னார்!” என்றான் அவன்.

‘இது உண்மையானால் அந்தப் பாவிக்கு என்ன, வேறு எந்தப்பாவிக்கு வேண்டுமானாலும் நான் பலியாகத் தயார்'என்றாள் அவள், உணர்ச்சிவயப்பட்டு.

அதற்குமேல் ராமமூர்த்தி அங்கே நிற்கவில்லை; ‘வா, கல்யாணி பலிக்கு அவர்கள் தயாராகிவிட்ட பிறகு, இனி நாம் பலி பீடத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்யவேண்டியதுதானே? வா வா!’ என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

‘வழி காட்டிவிட்டார், கடவுள் வழிகாட்டிவிட்டார்!” என்றான் கிழவன்!