பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை - 207

‘அவர்களுக்கு வழி காட்டியது சரி; எங்களுக்கு அவர் எப்போது வழி காட்டப்போகிறார்?’ என்று கேட்டான் தறுதலை.

‘திராவிடநாடு கிடைத்த பிறகு'என்றாள் தாழம்பூ, சிரித்துக்கொண்டே.

‘அதுவரை உன் அத்தான் கல்யாணத்தைத் தள்ளிப் போட மாட்டார், அம்மா வேலையைத்தான் தள்ளிப் போடுவார்'என்றான் கிழவன்.

<> <> <>

திருமணத்துக்குப் பிறகு ஒரு நாள் தன்னுடைய தங்கையைப் பார்ப்பதற்காக வந்திருந்த நம்பி, வழக்கம்போல் மாடி அறையில் யாரோ ஒரு பெண்ணுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியரைக் கண்டதும், ‘என்னம்மா, இது மனிதன் மாறவேயில்லையா?” என்று கேட்டான் ஏமாற்றத்துடன்.

‘இல்லை அண்ணா, அவர் மாறவும் இல்லை; அதைப்பற்றி நான் கவலைப்படவுமில்லை!” என்றாள் நறுமணம், தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையின் கன்னத்தை லேசாகக் கிள்ளிச் சிரித்துக்கொண்டே.

“ஆச்சரியமாயிருக்கிறது; உன்னுடைய நிலையிலும் உன்னால் சிரிக்க முடிவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! என்றான் நம்பி, பெருமூச்சுடன்.

‘அழுது புண்ணியமில்லை, அண்ணா! அவருக்காக மட்டுமல்ல. அவரைப் போற்றிப் புகழும் இந்த உலகத்துக்காகக்கூட நாம் அழுது புண்ணியமில்லை!” என்றாள் நறுமணமும் அதே பெருமூச்சுடன்.