பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 விந்தன்

படித்த பின் :

‘கல்யாணத்துக்குப் பிறகும் மாறாத பேராசிரியர் நெடுமாறனார் கடைசியில் என்னவானார்? அவரை மணந்த நறுமணம் அதற்கு மேலும் அவருடைய ‘திருவிளையாடல்களை எப்படிச் சகித்தாள்? முளை யிலேயே கிள்ளி எறிந்து விட முயன்ற அவளுடைய குழந்தையைக் கல்யாணத்துக்குப் பிறகாவது அவர் நேசித்தாரா? மாணிக்கத்தின் தியாகத்தை மடத்தனம் என்ற பேராசிரியரைப் போற்றிப் புகழும் அந்த ‘நாலு பேர் அண்ணனுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யத் துணிந்து, அது நிறைவேறாமற் போனபின் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்ட நறுமணத்தைப் பற்றி என்ன சொன்னார்கள்? ராமமூர்த்தி தன் குருநாதரைப் புரிந்துகொண்டாரா? என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள் - ஏனெனில்,இது நடந்த கதையல்ல. நடந்து கொண்டிருக்கும் கதை:

அதன் முடிவை இப்போதே சொல்ல நான் யார்? - காலம் சொல்லட்டும், காத்திருப்போம்.

- விந்தன் நன்றிக்கு நன்றி

இந்தக் கதையை முதன்முதலாகத் தங்கள் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியிட்டு, எனக்கும் - அதே சமயத்தில் தங்களுக்கும் உதவிக்கொண்ட ‘அமுதசுரபி’ பதிப்பகத்தாருக்கு.