பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 27

நான் வருகிறேன் . நீ இந்தக் குழந்தையைக் காப்பாற்று; எப்படியாவது காப்பாற்று ஆனால், அவன் வளர்ந்த பிறகு அவனைப் பற்றிய ரகசியத்தை மட்டும் அவனிடம் சொல்லி விடாதே! அதனால் ஒருவேளை அவன் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாலும் மாய்த்துக் கொள்ளலாம்; அல்லது சமூகம் அவனை மாய்த்து விடலாம் - நான் வரட்டுமா?

அன்பு முத்தங்கள் - குழந்தைக்கு மட்டுமல்ல; உனக்கும் சேர்த்துத்தான்!

இப்படிக்கு, நறுமணம் நறுமணம்! - இந்தப் பெயரை இதற்கு முன் எங்கேயோ கேட்டாற் போலிருக்கிறதே? ஆம், பெங்களூரில்; உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது - அந்த நறுமணம் இந்த நறுமணமாக இருப்பாளா, என்ன?

உலகில் ஒரு நறுமணமா, இரண்டு நறுமணமா? - எத்தனையோ நறுமணங்கள்!

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது ‘எனக்கு நேரமாச்சு கடிதத்தைக் கொடுத்து விடுகிறீர்களா அம்மா?’ என்றாள் விசாலம் அங்கே வந்து.

‘இதோ கொடுக்கிறேன்’ என்று இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவளிடம் நீட்டினாள் கல்யாணி.

‘இது எதற்கு?’

‘'நான் திருடுவதற்கு முன்னால் அவர்கள் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்து விட்டுக் கிழித்து எறிந்து விட்டார்கள் என்று சொல்வதற்கு!'