பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விந்தன்

எனககாக இன்னும் கொஞ்சநாட்கள் உயிர் வாழவா? - இல்லை; உன்னால் கொல்லப்பட வேண்டியவன் அந்த நயவஞ்சகன்; இந்த நப்பாசை பிடித்த கிழவி அல்ல’ என்று என் மனம் என்னை இடித்துரைத்ததால்!

என்னுடையக் கொலைக் கரங்களிலிருந்து விடுபட்ட அந்தக் குற்றுயிர் சொல்லிற்று:

‘உன்னுடைய குழந்தையைக் கொல்ல யாரால் முடியும் தன்னைக் கொல்வதற்காகக் கொடுக்கப்பட்ட விஷக்கோப்பையைக் கண்டு யாரோ ஒரு ஞானி சிரித்தானாமே, அவனைப் போல உன்னுடைய குழந்தையும் என்னுடைய விஷப் பாலாடையக் கண்டதும் சிரித்ததடி அந்தச் சிரிப்பிலே என் கையிலிருந்த பாலாடை எங்கே போயிற்றோ, எனக்குத் தெரியாது; நான் இவனை வாரி அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டேன்’

இதிலிருந்து என்ன தெரிகிறது? என்ன தான் கொடும் பாவியாயிருந்தாலும் இதயம் என்று ஒன்று இருக்கத்தான் இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?

அந்த இதயம் அவனுக்கும் இருக்கும். அது எனக்காக இரங்கா விட்டாலும் இந்தக் குழந்தைக்காகவாவது என்றாவது ஒருநாள் இரங்கும் என்று நான் இத்தனை நாட்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். அது இரங்கவில்லை; எனக்காக என் அண்ணன் உயிர் துறந்தப் பிறகும் அது இரங்கவில்லை.

அண்ணனா அவன்? - ஆம், அண்ணன் தான் - அதிசய அண்ணன்:

அவன் மட்டும் அன்றே எங்கள் காதலுக்கு குறுக்கே நின்றிருந்தால்?- அதைப் பற்றி இப்போது எண்ணி என்ன பயன்? எழுதித்தான் என்ன பயன்?