பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விந்தன்

எவ்வளவு இனிமையானவனாயிருக்கிறாய்!” என்றுக் குழந்தையிடம் கொஞ்சினான். கொஞ்சிவிட்டு,

“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்; கானமுண்டாம்; சிறபமுதற் கலைகளுண்டாம்; ஆதலினால், காதல் செய்வீர்; உலகத்திரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்!’

என்று கரக் கம்பம் சிரக் கம்பமெல்லாம் செய்தபடி பாடிக் கொண்டே சென்று விட்டான், அவன்

பைத்தியக்காரனாயிருப்பானோ - பைத்தியக்காரனா யிருந்தால் அவனிடம் ரூபா பத்தாயிரம் கூட இருக்குமா, என்ன?

ஏன் இருக்காது? - பணமே இந்தக் காலத்தில் பைத்தியக்காரர்களிடம்தானே இருக்கிறது?

இப்படி நினைப்பவர்கள் வேண்டுமானால் தங்களைத் தாங்களே காரியக்காரர்களாக நினைத்துக்கொண்டு அவஸ்தைப்படலாம். ஆனால், உண்மையில் பணம் யாரிடம் இருக்கிறது? காரியக்காரர்களிடம் தான் இருக்கிறது!

அது எப்படியாவது போகட்டும் அவன் ஒருவேளை யாரையாவது காதலித்து, அந்தக் காதலிலே தோல்வி யுற்று, அந்தத் தோல்வியால் உளநோய்க்கு ஆளாகி, அந்த உளநோயால் தன்னிடமிருந்த பணத்தைக் கொண்டு வந்து...

என்னிடம் ஏன் கொடுக்க வேண்டுமாம்? அதிலும், அந்தப் பணத்தைத் தன்னுடைய பணம் என்றுகூட அவன் சொல்லவில்லையே? - இவர் கொடுத்தது என்கிறானே? -