பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்...!” காற்றிலே மிதந்து வந்த இந்தப் பாட்டு, பேராசிரியர்கள் இருவரையும் கதி கலங்க வைத்தது.

‘அவனாய்த்தான் இருக்குமோ? என்றார் நெடுமாறனார்.

‘இருட்டில் இனம் தெரியவில்லை!” என்றான் ராமமூர்த்தி.

“குரல் மட்டும் அவனுடையக் குரல் போலிருக்கிறதே?” ‘ஆம்; அவனுடையக் குரல்தான்!’ “செத்தவர்கள் திரும்பிவருவார்களா, என்ன” ‘அவர்கள் வராவிட்டாலும் அவர்களுடைய ஆவி வரும் என்று சொல்வார்களே!”

‘அதில் உனக்கு நம்பிக்கை உண்டா, என்ன?”

இவ்வாறு கேட்டுக்கொண்டே அவனை ஒரு கையால் அணைத்துப் பிடிக்கப் போனார் பேராசிரியர் - அவ்வளவு தான்; ‘என்ன தைரியமடா உனக்கு, என்னை அனைத்துப் பிடிக்க?’ என்று சீறியபடியாரோ ஒரு பெண் தன் காலில் இருந்ததைக் கழற்றப் போனாள் - அப்போதுதான் தெரிந்தது, தான் அணைத்துப் பிடித்தது ராமமூர்த்தியை அல்ல; யாரோ ஒரு பெண்ணை என்பது பேராசிரியருக்கு!

‘அட, பாவி என்னை விட்டுவிட்டு நீ எங்கே போய் விட்டாய்?” - திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் பேராசிரியர்; சற்றுத் தூரத்தில் அவன் ஒடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவ்வளவுதான்; டாக்டரும் எடுத்தார், ஒட்டம்!