பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 47

“என்னுடைய இதயப்பூர்வமான நன்றி உங்களுக்கு, இவர் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும் இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விடட்டுமா?” என்றாள் நறுமணம்.

‘விரும்பினால் சேர்த்து விடுங்கள்; இல்லாவிட்டால் நானே வந்து பார்த்துக் கொள்கிறேன்!”

டாக்டர் போய்விட்டார்; மேலே என்ன செய்வ தென்று தோன்றவில்லை, நறுமணத்துக்கு. எதற்கும் உடனே போய் ஒரு டாக்ஸி'யை அழைத்துக் கொண்டு வந்துவிடலாமா என்று நினைத்தாள் அதற்குள் இவர் கண்விழித்துக் கொண்டு விட்டால்? - என்னைக் காணாமல் என்ன நினைப்பார்?

‘'வேண்டாம் - டாக்டர்தான் இனி ஒரு கவலையு மில்லை என்று சொல்லிவிட்டாரே! வேண்டாம். முதலில் இவர் கண் திறக்கட்டும்; அதற்குப் பின் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்!”

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவள் அந்தக் கிழவனுக்கு அருகே அமர்ந்து, அவனுடைய கண்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தக் கிழவனின் கண் மட்டும் திறக்கவில்லை; மனமும் திறந்தது. ‘காப்பாற்றி விட்டார்; கடவுள் உன்னைக் காப்பாற்றி விட்டார்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான், நறுமணத்தின் உதவியுடன்.

“ஆமாம்; காப்பாற்றி விட்டார் காலை ஒடித்துக் கொண்டு!” என்றாள் நறுமணம்.

‘அப்பா யார் என்று தெரியாதவர்கள்தான் அப்படி யெல்லாம் சொல்வார்கள், அம்மா! நீ சொல்லக் கூடாது’ என்றான் கிழவன்.