பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விந்தன்

அங்கே....

டெல்லியில் நடக்கும் ஏதோ ஒரு மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்தார் டாக்டர்; அவரிடம் விஷயத்தைச் சொன்னாள் நறுமணம்.

‘பாராட்டுகிறேன்! - இம்மாதிரி விஷயங்களில் பார்த்தும் பார்க்காதவர்கள் போல் போய்விடுவது சிலருடைய இயல்பு; போலீசுக்குப் போன் செய்துவிட்டு, அத்துடன் தங்கள் கடமை தீர்ந்தது என்று அபாயத்துக் குள்ளானவனையும் தீர்த்துவிடுவது இன்னும் சிலருடைய இயல்பு இந்த இரண்டு வகையிலும் சேராமல் நீங்கள் உடனே டாக்டரின் உதவியை நாடியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்!’ என்று அவளைப் பாராட்டிவிட்டு டாக்டர் திரும்பினார்; கம்பவுண்டர் பெட்டி படுக்கையுடன் அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தான் - காரில் வைப்பதற்காக.

‘இதோ பார். இதையும் எடுத்துக்கொண்டு போய்க் காரில் வை!’ என்று தம் தோல் பையைக் காட்டினார் டாக்டர்; ‘சரி, ஸார்!’ என்று அவன் தலையை ஆட்டிவிட்டுச் சென்றான். -

அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அவர்கள் மூவரும் கிழவனுக்கு அருகே இருந்தனர்; டாக்டர் தாம் செய்ய வேண்டிய சிகிச்சையைச் செய்துமுடித்துவிட்டு, ‘கிங்காங், தாராசிங்கெல்லாம்கூட ஒன்றும் செய்ய முடியாது, இந்தக் கிழவரிடத்திலே; அவ்வளவு உடல் வலிமை இவருக்கு. இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிஷங்களுக்குள் இவர் கண் திறந்துவிடுவார்; நினைவு தப்பாமல் பேசவும் ஆரம்பித்துவிடுவார் - நான் வரட்டுமா, எனக்கு வண்டியைப் பிடிக்க இன்னும் ஏழே நிமிஷங்கள்தான் பாக்கியிருக் கின்றன என்றார் டாக்டர், தம் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே.