பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வித்தன்

மண்குடிசை எங்கே? அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் தான் எத்தனை வகைகளில் வித்தியாசம்?

ஆனால்...

அந்தப் பெரிய பெரிய வீட்டிலே இல்லாத ஏதோ ஒன்று, இந்தச் சின்னச் சின்ன வீட்டிலே இருப்பது போலிருந்தது, அவளுக்கு.

சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் அது வளரவில்லை; தேயவில்லை; வாழவில்லை; சாகவும் இல்லை. புத்துயிரெடுத்து, புது மணம் வீசி, புதுப் பொலிவு காட்டவுமில்லை; உலர்ந்து, கருகி, உதிர்ந்து, மறைந்து மண்ணோடு மண்ணாகிப் போய்விடவும் இல்லை!

எப்பொழுதும் ஒரே நிலையில், ஒரே அளவில் அது இருப்பதுபோலிருந்தது; வாழ்வது போலிருந்தது உதட்டை உறைவிடமாகக் கொள்ளாமல், உள்ளத்தை மட்டுமே உறைவிடமாகக் கொண்டு!

ஆனால்...

அதன் பெயர் என்னவென்றும் அவனுக்குத் தெரியவில்லை; அதன் பொருள் என்ன வென்றும் அவனுக்குப் புரியவில்லை - தெரியாவிட்டால் என்ன, புரியாவிட்டால் என்ன? - அதுவே அவனாகவும், அவனே அதுவாகவும் இருக்கும்போது?

வந்த ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இவையனைத் தையும் தெரிந்துகொண்டுவிட்ட நறுமணம் வானத்தை நோக்கினாள்; நோக்கி...

ஒ, அன்பே என் அன்புள்ள அன்பே மனிதர்கள் தான் உருவத்தில் ஒருவராக இருந்தாலும் உள்ளத்திலே இருவராக இருக்கிறார்களென்றால், நீயுமா சொல்லில் ஒற்றையாயிருந்து செயலில் இரட்டையாக இருக்கிறாய்?