பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விந்தன்

ஒரு நாள் இரவு தெருவிலே ஒரு வழிப்பறித் திருடனின் தாக்குதலுக்குள்ளான ஒருவன், ஐயோ, என்னைக் காப்பாற்றுவார் இந்தத் தெருவில் யாருமே இல்லையா? என்று தீனக்குரல் எழுப்பினான்; ஒடுங்கள்; அவனைக் காப்பாற்றுங்கள்!’ என்றாள் அவள்; ‘வருந்துகிறேன், கடவுள் அவனைக் காப்பாற்றட்டும்!” என்றார் அவர்!

இன்னொரு நாள் - அபலை ஒருத்தி வந்தாள்; ஆணழகன் ஒருவனால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்டு விட்ட தன் கதையை ஆங்கிலத்தில் சொன்னாள் - படித்தவளுக்கு முன்னால் தானும் படித்தவர் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவோ, என்னவோ? - ‘வருந்து கிறேன்!” என்றார். அவர், வழக்கம்போல் - தமிழில், தமிழ் பற்றைக்காட்டிக் கொள்வதற்காக. நன்றி ஒருவேளை உணவும், உடுமலைப்பேட்டைக்குச் செல்ல ஒரு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்தால், வாழ்க்கையில் மேலும் வழுக்கி விழுந்து விடாமல் நான் ஊருக்குப் போய்ச் சேர்ந்துவிடுவேன்; உதவ முடியுமா உங்களால் என்றாள் அவள். மறுபடியும் ஆங்கிலத்தில். ‘வருந்து கிறேன்! தனிப்பட்டவர்களால் ஆவது ஒன்றுமில்லை; அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்!” என்றார் அவர். மறுபடியும் தமிழில் வருந்துகிறேன், உங்களை வருந்த வைத்ததற்காக!’ என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது அவளுக்கு! - நறுமணம் என்ன செய்வாள் பாவம், நாலைந்து தலைமுறைகளுக்குக் காணும் அளவுக்கு சொத்துரிமையுள்ள பேராசிரியரே ‘வருந்துவதோடு நிற்கும்போது? ஆயினும், தன்னைப் போன்ற ஒரு பெண் சில ரூபாய்களுக்காக இன்னொரு முறை வழுக்கி விழுவதை அவள் விரும்பவில்லை. எனவே தன்னுடைய அண்ணன், வீட்டுச் செலவுக்காகத் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பதினைந்துரூபாயை