பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விந்தன்


போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தோய்ந்து கிடக்கிறது!” என்றது கட்டிளங்காளை.


‘எப்படி, தறுதலையின் ஆராய்ச்சி ‘ என்றான் கிழவன். -


‘தறுதலையா!’ என்று வாயைப் பிளந்தாள் நறுமணம்.


‘ஒ, இவருடைய பெயரை நான் இன்னும் உனக்குச் சொல்லவில்லையா? - அதுதான் அம்மா, இவருடைய பெயர் - ஆறுமுகம்’ என்று பெற்றோர் இட்டபெயர், ஆண்டவன் பெயராயிருப்பதால், தறுதலை’ என்று மாற்றி வைத்துக்கொண்டு விட்டாராம்!”


‘தறுதலை, தகப்பன் சாமி என்பதெல்லாம் கூட ஆறுமுகக் கடவுளின் பெயர்கள்தானே?”


‘அது தெரியாது போலிருக்கிறது இவருக்கு!’ என்றான் கிழவன்.


“தெரியாமலென்ன, எதிலுமே புதுமை விரும்புபவன் நான்; பெயரிலும் ஏதாவது புதுமை இருக்கட்டுமே என்பதற்காக அப்படி வைத்துக்கொண்டேன்!’ என்று அவன் சமாளித்தான்.


‘'எதிலுமே புதுமை விரும்புபவன் நான்’ என்று சொன்னபோது, அவன் தன்னைப் பார்த்த பார்வை என்னவோபோலிருந்தது நறுமணத்துக்கு. எனவே, “எதில் வேண்டுமானாலும் புதுமையைத் தேடுங்கள், தயவு செய்து பெண்கள் விஷயத்தில் மட்டும் புதுமையைத் தேடாதீர்கள் - போதும், சமூகத்தை நாற அடித்ததெல்லாம் போதும்!” என்றாள் கொஞ்சம் காரமாகவே.


“இவர் அதை ஒப்புக் கொள்வாரென்று நினைக்கிறேன். ஏனெனில் தாலி அறுத்தவளுக்குத் தாலி கட்டும் திட்டம்