பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 93

இத்தனை நாளும் இல்லாமல் இன்று அவிழ்த்து எறிந்தால், ‘ஏன் அவிழ்த்து எறிகிறாய்?” என்று வீட்டிலுள் ளவர்கள் கேட்கமாட்டார்களா? கழற்றி எறிந்தால், ‘ஏன் கழற்றி எறிகிறாய்?” என்று வீதியிலுள்ளவர்கள் கேட்க மாட்டார்களா? அவர்களிடம் நான் எதைக் காரணமாகச் சொல்வது, என்னத்தைக் காரணமாகச் சொல்வது? கடவுளே, மண்ணோடு மண்ணாகும் வரை இந்த உளைச்சலால் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி நான் மனம் புண்ணாகிக் கொண்டிருக்க வேண்டியதுதானா? - ஒன்றும் புரியவில்லை எனக்கு.

ஆனால்...

இந்த நிலைக்கு வருவதற்கு முன்னாலேயே நான் எஸ்.எஸ்.எல். ஸி. பரீட்சையில் தேறிவிட்டேன் என்பதும் தமிழ் எம்.ஏ. பரீட்சையில் தேறி, என் அண்ணா வேலை தேடிக் கொண்டிருந்தான் என்பதும் எனக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கக் கூடியதாயிருந்தது. அந்த ஆறுதலில் ஒவ்வொரு நாளையும் நான் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்தக் கடிதத்தைப் பார்த்தாயா?” என்று என்னிடம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான் என் அண்ணா.

அது சென்னையிலிருந்த ஒரு தினசரிப் பத்திரிகையின் காரியாலயத்திலிருந்து அவனுக்கு வந்திருந்தது உதவி ஆசிரியர் வேலைக்காகத் தாங்கள் நடத்தப் போகும் தேர்வில் அவனையும் வந்து கலந்து கொள்ளும்படி.

‘போயும் போயும் பத்திரிகைத் தொழிலிலா இறங்கப் போகிறாய்?” என்றேன் நான்.

‘எனக்கென்னமோ அதுதான் பிடித்திருக்கிறது!’ என்றான் அவன்.