பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் மூலம் ஓயாத அறிவுப் போர் நடத்தியவர். ஒப்புர வும் மனிதநேய முமே தமிழரின் பண்பாடு என்பதைக் கவிதைகளால் முரசறைந்தவர், அரசவைக் கவிஞர்' என்ற பதவி மட்டும் இருந்திருக்குமானால் அதில் அமர்ந்து தமிழ் மொழிக் குப் பெருமை சேர்ப்பதற்கான தகுதிகள் அனைத்தும் உடையவர். அவருடைய மறைவின் மூலம் தமிழ் உலகம் ஒர் அபூர்வப் படைப்பாளியை இழந்து விட்டது. மரபு வழுவாமல் அதே சமத்தில் புதுமை பூத்த இனிய கவிதைகளைச் சொரிந்து வந்த தமிழ்ப் பொழில் மறைந்து விட்டது. அதிலும், உரைநடைக்கே கவிதை போல வேடமிட்டுக் காட்டும் நவீன கவிஞர்கள் மலிந்துவரும் இக்காலத்தில் தரம்மிக்க மரபுக் கவிதைகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஈடு செய்யக்கூடிய வகையில் சுரந்து அளித்து வந்த செந்தமிழ் ஊற்று முடியரசன். தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர்களின் படைப்புகளை அரசுடைமை ஆக்கும் சீரிய திட்டம் ஒன்றைத் தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வரி ைசயி ல் கவிஞர் முடியரசனின் படைப்புகளையும் அரசுடைமையாக்கிச் சிறப்பிப்பதன் மூலம் இந்த அற்புதக் கவிஞனுக்குத் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான அஞ்சலியைப் பிரதிபலிக்க முடியும்.

= 'தினமணி' நாளிதழ், முடியரசனார் மறைவிற்காக புதுமை பூத்த மரபுக் கவிஞர் என்ற தலைப்பிட்டுத் தீட்டிய, 5-12-1998 தலையங்கம். -