பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பரடிகள்

திருத்தலங்கள் பலசென்று, கசிந்து நின்று

திருவாயால் தேவாரம் பாடி வந்தார்; உருக்குலைந்த இடமெல்லாம் தூய்மை செய்ய

உழவாரப் படையொன்று கையிற் கொண்டார்; அருத்தியொரு ஞானப்பால் உண்ட வாயால்

அப்பரெனச் சம்பந்தன் அழைக்க நின்றார்; திருத்தமுற நடையறாத் துறவு பூண்டார்;

திருநாவுக் கரசரெனப் புகழும் பெற்றார்.

வெப்புறுத்திக் கடலுக்குள் கட்டி வீழ்த்தி,

வேதனைக்குள் தள்ளிடினும் கொள்கை மாறா அப்பருக்குச் சமமாக ஒப்பு ரைக்க

ஆளில்லை; சமயங்கள் பலவுந் தோய்ந்து தப்பறுக்கும் நிலையுணர்ந்த தரும சேனர்;

தவமுனிவர், வேளாளர், தகுதி மிக்கார்; அப்பழுக்கே இல்லாத ஒழுக்க சிலர்:

அவர்கொண்ட தொண்டுள்ளம் வாழ்க வாழ்க.