பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கோட்டைக் காந்தி

(அண்ணல் சுப்பிரமணியனார்க்குப் புதுக்கோட்டைக் காந்தி நகர் மக்கள் 17.10.1970-இல் நடத்திய பாராட்டு விழாவில் அம்மக்கள் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்)

கற்றுணர்ந்த மேலவனே, கற்ற வற்றைக்

கடைப்பிடித்து வாழ்பவனே, கவிஞர் தம்மை முற்றுணர்ந்த புலவர்தமைச் சாவா வண்ணம்

முன்னின்று காத்தவனே, எங்கள் தந்தாய், உற்றவரும் மற்றவரும் அண்ணா என்றே

உரிமையுடன் அழைக்கின்ற அண்ணால், எங்கள் சுற்றமெலாம் வாழ்விக்க வந்த கோவே

சுப்ரமண்யப் பெயரோய் நீ வாழ்க நன்றே.

பிறப்பெடுத்த மாந்தரிலே பலரும் தம்மைப்

பேணுதற்கே வாழ்கின்றார்; சிலர்தாம் என்றும் மறப்பதற்கு முடியாத வண்ணம் வாழ்வை

மற்றவர்க்கும் பயன்படுத்தி வாழ்ந்து நிற்பார் சிறப்புடுத்த இவ்வாழ்வை நின்பாற் கண்டோம்;

சிரியனே பயன்கருதாத் தொண்டுக் கென்றே கரப்பெடுக்கும் அருளுளத்தால் வாழ்ந்து நிற்கும்

தோன்றல்நினக் கெவ்வாறு நன்றி சொல்வோம்?