பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(36)

மழைபொழிந்து பார்புரக்கும் முகில்த னக்கு

மாநிலத்தார் எவ்வாறு நன்றி சொல்வர்? விழைவெழுந்து பாலூட்டும் தாய்க்கு நன்றி

விளம்பிடஓர் சொல்லுண்டோ? எளியேம் எம்மை விழிதிறந்து வாழ்வுக்கு வழிதி றந்து

வீறுபெற உய்வித்தோய் நினக்கு நன்றி மொழிவதற்கும் மொழிகாணேம்; எங்கள் நெஞ்சால்

முப்பொழுதும் தொழுவதன்றி வழியுங் காணேம்.

பொறியியலில் வல்லவரை, வானில் நீரில்

போர்புரியும் படைஞர்தமை, அறிவு நல்கி நெறியியக்கும் பல்வகைய ஆசான் மாரை,

நெஞ்சிரங்கும் மருத்துவரைப் புலவர்தம்மைப் பெரியவனே எம்மிடையில் தோற்று வித்தாய்!

பிள்ளையென எம்மையெலாம் வளர்த்து வந்தாய்! வறுமையிருட் படுகுழியில் கிடந்த எம்மை

வாழ்விக்க வரும்தலைவா! வணங்கு கின்றோம்.

காந்திநகர் மக்களுக்கு வாழ்வு நல்கக்

கல்விவளர் கழகமென ஒன்று கண்டாய்; ஈந்துபொருள், ஒளிநல்கி, நூல்கள் நல்கி,

எமக்கென ஒர் ஆசானும்நல்கி, என்றும் போந்திங்கு மேற்பார்வை இடையி டின்றிப்

புரிந்துவரும் ஆசிரியப் பெரியோய்! நாங்கள் காந்தியென நின்னைத்தான் கானு கின்றோம்

கருணைமனம் வாழ்கவென வாழ்த்து கின்றோம்.