பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர்தோறும் மலர்தோறும் சென்று வண்டு

மணம்சுவைத்துத் தேன்சுவைத்துச் சேர்த்து வைக்கும்; பலவாகும் சமயமெலாம் நீபு குந்து

பைந்தமிழை நுழைபுலத்தாற் சேர்த்து வைத்தாய், புலர்காலை எழுகதிரோன் உலகுக் கெல்லாம்

பொதுவெனல்போல் வெவ்வேறு சமய மாந்தர் பலர்சேர்ந்து வாழ்த்துகின்றார்; சமய மில்லேன்

பாமாலை கொண்டுன்னை வாழ்த்து கின்றேன்.

பல்வேறு சமயத்தார், சமயம் இல்லார்,

பன்மொழிகள் கற்றுணர்ந்தார், ஒன்று கற்றார், பல்வேறு கட்சியினர், கட்சி சாரார்,

பலபிளவுச் சாதியினர், சாதி வேண்டார், எல்லாரும் ஒன்றாகிப் போற்று கின்றார்;

இன்றமிழால் ஒன்றுபடும் காட்சி கண்டேன்; நல்லோர்தாம் பன்மையினாற் சிதறுண் ணாமல்

நலமிக்க ஒருமையினால் தமிழைக் காப்பர்.

குடியரசு நின்போலும் சான்றோர் தம்மைக்

கொண்டாடி விருதளிக்க மறந்த தேனும் முடியரசன் நின்பெருமை பாடு கின்றேன்

மூவேந்தர் மரபறிந்து வாழ்த்து கின்றேன்; மடியின்றிச் சுறுசுறுப்பால் தமிழைத் தேடும்

மாண்பால்அஞ் சிறைத்தும்பி என்று நின்னைப் படிஅழைக்க விருதளித்தேன்; என்பாற் செல்வம்

பாடலொன்றே அதையளித்தேன் பரிசி லாக.

மடி - சோம்பல், படி - பூமி