பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமலிந்த தில்லையிலே கற்கோவில்

தமிழரசன் கண்டான் அன்று; கலைபலவும் திகழ்கின்ற கலைக்கோவில்

ஒன்றின்று கண்டான் அண்ணா மலையரசன்; அதுகண்டு கூத்தரசன்

மனங்களித்து மன்றில் நின்று கலையறிய ஆடுகிறான் என்றகவி

மணிமொழியைக் கருத்தில் வைப்பாம்.

நிலையாத உலகத்தில் நிலைத்தசெயல் செய்தமையால் நெஞ்சந் தோறும் சிலையாக நிற்கின்றான் சித்திரமாத்

தோன்றுகின்றான் செழுமை கொண்ட மலையாக வாழ்கின்றான் கலையாக

வளர்கின்றான் மனத்துள் எண்ண அலையாக அசைகின்றான் அரியணையா நம்முளத்தை ஆக்கிக் கொண்டான்.

அரங்கிருக்கும் கடமிருக்கும் அருகிலிசைக்

கருவியெலாம் அமைந்தி ருக்கும் சுரமிருக்கும் தோற்கருவி துணையிருக்கும் குழுவொன்று சூழ்ந்தி ருக்கும் நரம்பிழுக்க மூச்சடக்கி நடுவிருந்து

பாடுபவர் நாவ சைத்தால் கரகரத்த குரலிருக்கும் தமிழ்மட்டும் அங்கிருக்கக் கண்ட தில்லை.