பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனி தந்த பாட்டு

பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக் கேட்டென்றன் நெஞ்சங் கிறுகிறுத்தேன்- வேட்டெழுந்து நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநியெனும் பாடல்வலான் தந்தான் படைத்து.

தேன்கலந்து தந்தனனோ தெள்ளமுதந் தந்தனனோ நான்கலந்தே இன்புற்றேன் நாடோறும் - வான்பறந்தேன்

வாட்டுந் துயர்துறந்தேன் வையந் தனைமறந்தேன் பாட்டை அவன்படிக்கக் கேட்டு.

கூற்றமிலா வாழ்வு கொடுத்த தமிழ்த்தாயே ஏற்றவரம் இம்மகற்கும் ஈந்தருள்வாய் - சாற்றுக் கணிச்சுவையை விஞ்சுங் கவிமாலை நின்றன் அனிச்சுவடிக் கீந்தான் அவன்.

(அனிச்சஅடி நாடகக் காப்பியத்தைப் படிக்கக் கேட்டுக் கனவிற் பாடியது)