பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

என் தந்தையார் கவியரசர் முடியரசனார் அவர்களின் இயற்கையடைவிற்கு முன்பிருந்தே, நூல் வடிவில் வெளிவராத அவரின் கவிதைகளைப் பல நூல்களாக நானே பதிப்பித்து வெளியிட எண்ணி, அவரது கவிதைகளைத் தேடி எடுத்துத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். என் தந்தை நெடுங்காலமாக உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தமையால், தொகுப்பிற்கான சரியான அறிவுரைகளை அவரிடமிருந்து என்னால் பெற இயலவில்லை. இதனால் நூல் வெளியீடுகள் காலத்தாழ்வாகிக் கொண்டே யிருந்தன. இந்நிலையில் என் தந்தையை இயற்கை கொண்டு சென்றது.

பின் மீண்டும் நான் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அப்பொழுது, "மனிதரைக் கண்டு கொண்டேன்' என்ற தலைப்பில் நூலொன்றைத் தொகுத்திருப்பதாக, என் தந்தை 'முன்னுரை' மட்டும் எழுதி வைத்திருந்த ஒரு தாள் மட்டும் என் கைக்குக் கிடைத்தது. அம்முன்னுரை இதோ:

மனிதரைக் கண்டுகொண்டேன்’

'கு மு காயத்திற் குறைகள் மலிந்து விட்டன. பண்பாடுகள் நலிந்து விட்டன. அந்நிலையைக் காணும் பொழுதெல்லாம் நெஞ்சம் குமுறுவதுண்டு; பொறுமுவதுண்டு; புழுங்குவதுண்டு. அந்த வேதனைகளில் வெடித்துக் கிளம்பிய பாடல்களைத் தொகுத்து, 'மனிதனைத் தேடுகிறேன்' என்ற தலைப்பில் ஒரு நூலாக்கினேன்.

20.2.81-இல் மதுரைப் பாத்திமா கல்லூரிப் பாட்டரங்கில் தலைமையேற்றுச் சிறிது நேரம் பேசியமர்ந்ததும் குளிர் காய்ச்சலால் தாக்குண்டேன். அவ்வமயம் முதல்வரும் பேராசிரியர்களும் காட்டிய பரிவுணர்ச்சி என்னுளத்தை நெகிழ வைத்து விட்டது.