பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாடுகள் வாடிவிட்டன; உண்மைதான். எனினும் ஆணிவேர் அற்றுவிடாமல் அங்கங்கே கிளை வேர்களை விட்டுக் கொண்டுதாணிருக்கிறது என்ற ஒர் உணர்வு தோன்றியது. அதனால் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் நிறைகளையும் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் அன்று அரும்பியது. ஆதலின் ஆங்காங்கே தம்மாலான நற்பணிகள் ஆற்றிவரும் மாந்தரை - நாட்டுக்கு, மொழிக்கு, மக்களுக்கு ஒல்லும் வகையால் உழைப்பினை நல்கும் நல்லோரை ஆன்று அவிந்து, அடங்கிய கொள்கைச் சான்றோரைக் கண்டு, மகிழ்ந்து பாடிய பாடல்களைத் தொகுத்து, 'மனிதரைக் கண்டு கொண்டேன்' என்ற தலைப்பில் ஒரு நூலாக்கினேன்.

குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்த முயல்வது ஒருமுறை. நிறைகளை எடுத்துக் காட்டி ஆர்வமூட்டி நெறிப்படுத்துவது மற்றொரு முறையாகும். அதனால், தனி மனிதரைப் புகழ்வது என் நோக்கமன்று. தன்னலம் தவிர்த்து பொது நல நோக்கு ஓரளவு காணப்படினும் அவர்களைப் பாடியிருக்கிறேன். வளருங் குமுகாயத்திற்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கைதான். வேறொன்றுமில்லை.”

அன்பன் முடியரசன்

மேற்கண்ட முன்னுரை எழுதப்பட்ட தாள் மட்டும்தான் கிடைத்ததே தவிர, அதில் குறிப்பிட்ட கவிதைகள் கிடைக்கவில்லை. அவை எவையென்றும் தெரியவில்லை.

இந்நிலையில் எந்தையின் ஆசைப்படி மனிதரைக் கண்டு கொண்டேன் என்ற தலைப்பில் நூலொன்று தொகுக்க எண்ணி, மேற்கண்ட எந்தையின் முன்னுரையில் குறிப்பிட்ட படியான மொழி, மக்கள், நாட்டுக்குத் தொண்டாற்றிய மாந்தர் பற்றி, என் தந்தை பாடிய பாடல்கள் ஒரு சிலவற்றை நான் தொகுத்து இந்நூலிற் கொடுத்துள்ளேன்.

கவிஞர் காட்டிய சிறந்த மாந்தரைக் கண்டு கொள்ள உதவிய மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் நன்றி. 'முடியரசன் குடில், அன்பன் மனை எண் : 569, சூடாமணி நகர், Աք. பாரி காரைக்குடி - 630 003