பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழைத்திடும் இடுக்கண் யாவும்

தளைத்தன நின்னைச் சுற்றி உழைத்தனை அவற்றைத் தள்ளி

உயர்ந்தனை, உயரும் போது களைத்துறும் உறவுக் கெல்லாம்

கைகொடுத் துதவி செய்தாய் செழித்தனை மேலும் மேலும்

செழித்துநீ வாழ்க தம்பி

முனைவர்நீ ஆன செய்தி

முதலில்யான் கேட்ட காலை எனதுளம் மகிழ்ந்த பாங்கை

எவ்வணம் எடுத்து ரைப்பேன் கனியொடு பாலுந் தேனும்

கலந்திடும் சுவையைக் கண்டேன் மனையொடு மக்கள் சுற்றம்

வளமெலாம் பெற்று வாழ்க

உளத்தினால் உயர்ந்தாய், பெற்ற

உடலினால் உயர்ந்தாய், கற்ற வளத்தினால் உயர்ந்தாய், செய்யுள் நாடக வளங்கள் ஆயக் களத்தினில் புகுந்து வென்றாய், கற்றவர் முனைவர் என்ன அழைத்திட உயர்ந்தாய், செய்கை

அனைத்திலும் உயர்ந்தாய் வாழி

(பேராசிரியர் ந. சத்திவேல், முனைவர் பட்டம் பெற்றமைக்கு மகிழ்ந்தளித்த வாழ்த்து)

தளைத்தன - பிணித்தன