பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு தரும் அழகன்

19–12–1982

நடையழகன் உடலழகன் நண்ணாரைச்

சொற்போரில் நடுங்க வைக்கும் விடையழகன் விழியழகன் விழைவுகொளும்

பண்பழகன் வெண்மை பூண்ட உடையழகன் உருவழகன் உளத்தெழுந்த

அன்பழகன் அறுபா னாண்டின் மடைதிறந்து வருகின்றான் மனத்துணர்வு பொங்கிவர வாழ்த்து கின்றேன்

ஆணழகன் இவனுக்கா ஆண்டறுப தாயிற்று? நேரில் நின்று காணுபவர் நம்புவரோ? கதையென்றே

கூறிடுவர்; கவர்ச்சி கொண்டு பூனுமெழில் பூத்துவரப் பொலிகின்றான்

மணமகன்போல, போற்றிக் காக்கும் மானுடையான் கொண்டஎழில் மாறாமல்

வாழ்கவென வாழ்த்து வோம்நாம்.

திருந்துமெழில் எவ்வண்ணம் சேர்த்தனனோ?

நமக்கொன்றும் தெரிய வில்லை அருந்தியநன் மருந்தெதுவோ? அவனொருகால் - நலத்துறையின் அமைச்ச ராகி

இருந்தமையால் வந்ததுவோ? இனியதமிழ் தந்ததுவோ? என்றும் நெஞ்சில் பொருந்திவரும் தூய்மையினால் பூத்ததுவோ?

புரிந்துகொள முடிய வில்லை