பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனியனிவன் மனநாளை என்தந்தை

பாவேந்தர் எழுதி வைத்தார் கனிவுடையன் மணிநாளை அவர்மகனாம்

கவியரசன் பாடு கின்றேன் எனிலஃதோர் பேறன்றோ! தலைமுறைகள்

இரண்டாலும் ஏத்தப் பெற்ற தனியுரிமை கொள்கின்றான் தந்தைமகன் தருகவிக்குப் பொருளாய் நின்றான்.

பகுத்தறிவுக் கோட்டைக்குள் பயின்றுவரும்

வீரனவன், பழமை என்று வகுத்தமைத்த ஆரியத்து வஞ்சனைகள்

அத்தனையும் மாய்ந்து போகச் செகுத்தழித்த பெரியாரைச் சிங்கமெனும்

ஐயாவை எந்த நாளும் அகத்தமைத்து வாழுமகன் அஞ்சாத

அன்பழகன் அவன்பேர் வாழ்க!

மண்ணாளும் ஆசையினால் மாற்றார்பின்

செலவிழையான் மடமை மிஞ்சிப் புண்ணான தமிழினத்தைப் போற்றுவதே

தொழிலானான்; புதுமை கண்ட தண்ணான தமிழ்மானம் தன்மானம்

தழைத்துவரக் காஞ்சி தந்த அண்ணாவின் வழிநடப்பான் அருளுடையான்

அன்பழகன் அவன்பேர் வாழ்க!