பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் சிரிப்பில் கலைஞர்

(இலக்கிய அணி,சென்6ԾxsԾruմՈՅՆ 2-Յ-79 அன்று எழிலுற நடத்தி ш கலைஞர் விழாவில் - கவினுறுடாவரங்கத் தலைமை ஏற்றுப் பாடினார் கவியரசு முடியரசனார். அவர் படைத்த தமிழ் விருந்து ஈண்டு காண்க! "அழகின் சிரிப்பில் கலைஞர்” என்பது பாவரங்கத் தலைட்ட)

விரித்துவரும் வலையிலெலாம் தப்பி நின்று

வீழாமல் சிரிக்கின்ற தமிழ ணங்கே! குறித்துவரும் பகையஞ்சிப் புறமிட் டோடக்

கூரறிவுப் படைதந்த எங்கள் தாயே! நெருப்புபுனல் செல்கறையான் வாய்கள் தப்பி

நின்றொளிரும் ஏடுடையாய்! அம்மா! நின்றன் சிரித்தமுகங் காண்பதற்கே என்றும் வாழ்வேன்

சிறியன்.எனைக் காப்பதுநின் கடமை யாகும்.

அஞ்சுகத்தின் மடிவளர்ந்தாய், முத்து வேலர்

அகம்மகிழ நடைபயின்றாய், ஆரூர்ப் பள்ளிப் பிஞ்சுமனத் தோழருடன் கல்வி கற்றாய்,

பெரியாரின் ஈரோட்டுப் பள்ளி சென்று நெஞ்சுரத்தைச் சிக்கனத்தைக் கற்றுக் கொண்டாய், நெகிழ்ந்துருகும் அண்ணாவின் கருணைமிக்க நெஞ்சகத்தைக் காஞ்சியிலே பெற்றுக் கொண்டாய்

நெருக்கடியில் சிரிப்பதற்கு யாங்குக் கற்றாய்?

மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றே

மெல்லியரின் இதழ்விரித்தால் மக்கள் நெஞ்ச ஒடையிலே மலர்சிரிக்கும், மணம்சி ரிக்கும்,

உகந்தவர்தம் நெஞ்சமெலாம் சுளிசி றக்கும்; கோடையிலே சிரித்தமலர் மணத்தை வாரிக்

கொண்டுசெலும் பொதிகைமலைத் தென்றல்; நியோ மேடையிலே சிரித்தவர்தம் பணத்தை வாரி

மெதுவாகக் கொண்டுசெலும் ஆரூர்த் தென்றல்.