பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கமெலாங் குறைந்தழுகி முகம்வ தங்கி

அழகழிந்து புறங்கூனி நடைத ளர்ந்து தங்கஒரு நிலையின்றித் தண்டு மின்றிப்

தள்ளாடிச் சோற்றுக்கு வழியு மின்றிப் பொங்கிவரும் வேதனையை அழுது தீர்த்துப்

புழுவினுங்கிழ் நிலையினராய் இரந்து வாழும் தொங்குமுடற் றொழுநோயர் வாழ்வை எண்ணத் தொடங்கியவர் எவருள்ளார் காந்தி யன்றி?

புதுவாழ்வு தரவந்த காந்தி யண்ணல்

போற்றியநற் கொள்கைகளை நெஞ்சிற் கொண்டு, விதிதானே தொழுநோயர் துயருக் கெல்லாம்

விதைஎன்ற சொல்மாற்றி வாழ்வு தந்து, மதிவாழும் துணிவோடு கருணை வாழும்

மனங்கொண்ட அருட்செல்வர் ஆளும் ஆட்சி இதுபோல வேறுண்டா? யாண்டும் இல்லை;

என்றென்றும் இவ்வரசு வாழ்க என்போம்.

பூவின்றிப் பொட்டின்றிக் கழுத்தில் கையில்

பூணுகின்ற அணியின்றிச் சுவைகள் உண்ண நாவின்றி எதிரில்வரத் தகுதி யின்றி

நலமெல்லாம் பெறலின்றி நெஞ்சுள் நாளும் கோவென்று கூவிஎழிற் கோதை மார்கள்

கொழுநர்தமை இழந்தமையால் வாழ்வு கெட்டுச் சாவென்று வருமென்று நொந்து நொந்து

சலித்திருந்து நடைப்பினமாய்க் கிடந்து ழன்றார்.