பக்கம்:மனிதர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனை கூடப் பண்ண முடியாது’ என்று நண்பர் திட மாகத் தெரிவித்தார். அதுதான் நான் அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்கேனேயாரு எந்த நேரத்திலே எப்படி மாறுவாங்க அல்லது என்ன ஆவாங்கன்னு எவரும் உறுதியாச் சொல்ல முடியாது..." போன தடவை நீங்க புலவரைப் பார்த்த போது, கடைசியா இப்படித்தான் சொன்னிங்க. இதை நான் மறக்கவேயில்லை, மறக்க முடியலே. புலவர் வாழ்க்கை யிலே ஏற்பட்ட மாற்றம், இந்தப் பேச்சு எவ்வளவு உண்மை யாப் போச்சு பார்த்தியான்னு என்னை அடிக்கடி எண்ணும் படி பண்ணிப் போட்டுது.' ஏன், அவனுக்கு என்ன ஆச்சு: என்னென்னவோ ஆயிட்டுது போங்க!' என்று இழுத்தார் ராமையா. தொடர்ந்து பெரிய தத்துவதரிசி மாதிரிப் பேசினார். 3

பணம் மனுசங்களை எப்படி எல்லாமோ ஆட்டி வைக்குது. வாழ்க்கையிலே கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கிற ஒருவன் கிட்டே கொஞ்சம் பணம் திடீர்னு கிடைச்சிட்டா, அவன் மனம் ஒரே அடியா மாறிப் போகுது. ரொம்ப நிறையக் கிடைக்கணும்கிற அவசியமே இல்லை. பணத்தை மொத்தமாக் கண்டிராதவன் கிட்டே, எதிர் பாராம ஆயிரம் ரூபா வந்து சேர்ந்தாலும் போதும். உடனே அவன் பெரிய சீமான் ஆயிட்டதா நினைச்சுப் போடுதான். புலவர் விசயமும் இப்படித்தான் ஆச்சு. திடீர்னு அவனுக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபா கிடைச்சது...” --س

லாட்டரியிலே பிரைஸ் ஏதாவது கிடைச்சதா?” இல்லியே. அவனுடைய அத்தை ஒருத்தி மண்டை யைப் போட்டா. அவளுக்கு புள்ளை குட்டி கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/101&oldid=855426" இலிருந்து மீள்விக்கப்பட்டது