பக்கம்:மனிதர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 0 புலவர் தான் கொள்ளி வச்சான். அந்தப் பெரிய மனுஷி சிறுவாடு சேர்த்தும், எதுஎதுவோ பண்ணியும் ரெண்டா பிரம் ரூபாவ ைசேர்த்திருந்தா. அது இவனுக்கு வந்து சேர்ந்தது. அவ்வளவுதான். ஆளைக் கைகொண்டு புடிக்க முடியாதும்பாகளே, அப்படி ஆபிட்டான். அவனுக்கு ரெண்டாயிர ரூபாங்கிறது. பெரிய ஐஸ்வரியமாப் பட் டிட்டுது. தனக்கு நீகர் யாருமில்லேன்னு திரிய ஆரம் பிச்சான். நான் பெரிய புலவராக்கும்; நான் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போறேனாக்கும்னு புலம்பித்திரிஞ்சான்...' அடப் பாவி, கெடுத்தானே கேட்டை இந்த ஐடியாவை அவனுக்கு யாரு கொடுத்தாங்களோ? உங்க மாதிரி ஒரு நண்பர்தான். தம்மைப் பார்க்க ஒரு ஃபிரண்டு வந்திருந்தாரு, புலவரு பாட்டைக் கேட்டாரு. ஆகா ஒகோன்னாரு புலவர், நீரு சினிமாவுக்குப் பாட் டெழுதலாம் வேய்னு புலவர் தலையிலே ஐஸ் வச்சாரு. துமாதிரி பாட்டுகளுக்குத்தான் சினிமாலே மவுசு ந்தப் புலவர் பாடியிருக்கிறதைவிட சாதாரண இப்போ இ அதிகம். மானது, சாரமற்றது, வெறும் வார்த்தை அடுக்குகளால் ஆனதை எல்லாம் இசையோடு சேர்த்து ஜமாய்சிடுறாங்க. அதெல்லாம் பெரிய ஹிட் ஆயிடுது. நம்ம புலவரும் ஏன் சினிமாப் பாட்டுகள் எழுத முடியாதுங்கறேன்? ஏன் எழுதக் கூடாதுன்னு கேட்கேன்; அதிர்ஷ்டம் வேணும் சார். அதிர்ஷ்டம் கொஞ்சம் கண்ணடிச்சா, புலவரும் ஒகோன்னு வந்திடுவாருன்னு ஒரே அடியா தூக்கிட்டாரு. புலவர் 'தலை கிறுகிறுத்திட்டுதுன்னு தான் சொல்லனும் அது உள்ளார வேலை செஞ்சுக்கிட்டே இருந்திருக்கு. எதிர் பாராம, ரெண்டாயிரம் கெடச்சுதா? அதிர்ஷ்டம் கண்ண டிக்க ஆரம்பிச்சாச்சுன்னு புலவர் நம்பிவிட்டான். படத் துக்குப் பாட்டு எழுதறதுக்கு முன்னாடியே, நான் கவிஞ. ராக்கும் என்று சொல்லி, குடிக்கலானான். பொம்பிளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/102&oldid=855428" இலிருந்து மீள்விக்கப்பட்டது