பக்கம்:மனிதர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 09 மழை பெய்து முடித்த பிறகு, மரமல்லிகை மரத்தின் அடியில் உதிர்ந்து கிடக்கும் பன்னீர்’ப் பூக்கள்...அதிகாலை யில் மரங்களின் அடியில் விழுந்து நனைந்து கிடக்கும் பாதிரி பூக்கள்... ஒடையில் ஒடுகின்ற மழை நீரில் தாறுமாறாகக் கோலங்கள் கிறுக்கி ஆடும் பூச்சிகள்-சம்பந்தம் இல்லாமல் நினைவுக் குமிழ்களாக வெடிக்கின்றன. அன்று ஏதோ விசேஷ நாள். அண்டை அயல்களில் குஷியும் கும்மாளியும். இயற்கை அழுதுகொண்டிருந்தது" அடைமழை. நான் வெளியே எங்கும் போக முடியாத நிலைமை. காப்பி சாப்பிடக் கூடப் போக இயலவில்லை. கதவை அடைத்துக்கொண்டு அறைக்குள் ஒடுங்கிக் கிடந் தேன்- இப்போது மாதிரித்தான். என் உள்ளத்தில் சோகம் கப்பிக் கிடந்தது. காரணமில்லாமல் அழுகை பொங்கி வந்தது, வெளியாரின் விழா குதுகலத்தை அனுபவிக்க முடியாமல்- அனுபவிக்க மனமில்லாமல்அழுமூஞ்சித்தனமாக அறையினுள் கிடப்பதற்காகவும் நான் அழுதேன். யாருமற்ற தனியனாய் இப்பரந்த உலகத்திலே விடப்பட்டவன் போல, செய்யும் வகை அறியாது செல்லும் வழி தெரியாது திக்குத் திகாந்திரமற்ற பெருவெளியிலே தனித்து நிற்கும் ஒரு நாடோடிபோல, வெறுமை நிலையை உணர்ந்து அழுதேன், வெகுநேரம் வரை. இப்போதும் அப்படித்தான். வெளியே மழை சினுங்கத் தொடங்கிவிட்டது. மணி ஆறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மழை இருட்டுடன், விரைந்து வரும் இரவின் கருமையும் கூடிக்கொண்டது. எங்கும் கன்னங் கனிந்த கருக்கிருட்டு... சட்டென்று ஒரு நினைவு நிழல். திடீரெனச் சாடுகிறது மழை. மோதுகிறது காற்று. மழைக் கம்பிகள் வகுப்பு அறையினுள் பாய்கின்றன. எங்கள் சரித்திர ஆசிரியர் ஃபாதர் கோமஸ்- பிரிட்டிஷ் ஹிஸ்டரிப் புத்தகத்தில் உள்ள எட்டாவது என்ரியின் படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/111&oldid=855446" இலிருந்து மீள்விக்கப்பட்டது