பக்கம்:மனிதர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩获 மணல் இன்னும் வெண்மையாகத்தான் தெரிந்தது. கண் முன்னே ஆறு கருமையாக ஊர்ந்து கொண்டிருந்ததும் அவருக்குள் புலனாயிற்று. -ஆன்ம உயர்வு வேட்கையில் முனைகிறவர்கள் சொல்லும் உதாரணங்களையே கவனிப்போமே. ஆறு ஒே கிறது. அது தன்னின்பம் மட்டுமா பெறுகிறது? தன் நிறை வும் தன்னுயர்வும் மாத்திரமா அதன் லட்சியங்கள் இல்லையே! கால்வாய்களாகவும், குளங்களாகவும், சிறுசிறு வாய்க்கால்களாகவும் அது தன்னைப் பகிர்ந்து கொள் கிறதே. மண்ணை வளம் செய்யத் தன் சக்தியை அளிக் கிறதே. ஜீவ நதியின் பெருமை அதனுடைய உயிரூட்டும் வளம் பெருக்கும், உயர் பணியிலன்றோ கிட்டுகிறது. மழை பெய்கிறது! மீண்டும் நீராவியாகி வானை அடை கிறது என்பது சரிதான். மண்ணின் வறட்சியைத் தணிக்கும் அமுதமாக, வரும் மழை தன்னையே உலகுக்கு ஈந்து உயிர் ராசிகளுக்கெல்லாம் ஊட்டம் தருகிறதே. தன்னை இதித்து மன்னுயிர்க்கெல்லாம் பணிபுரியும் உத்தமப் பண்பை அல்லவோ அதனிடமிருந்து நாம் கற்றாக வேண்டும்? மணலில் யாரோ நடந்துவரும் காலடி ஓசை சர்ர்சர்ரக்" என்று கேட்டது. பேச்சுக் குரலும் வந்தது. உழைத் துவிட்டு, நீராட வருகிறவர்கள் என்பது புரிந்தது. அவர்கள் சற்றுத் தள்ளியே சென்றதால் இருட்டில் உட்கார்ந்திருந்த ஆளைக் கவனிக்கவில்லை. அங்கே அவ் வேளையில் அப்படி ஒருவர் சிலைபோல் இருப்பார் என்ற நினைப்புகூட அவர்களுக்கு எழ முடியாதுதானே! அவர்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். உரத்த குரலில் பேசினார்கள். அவர்கள் பேச்சு சதானந்தம் காதுகளில் மிகத் தெளிவாக விழுந்தது. அன்றாடக் கவலைகள், கஷ்டங்கள் அரிசி கிடைக் காதது, குடும்பத்தில் சீக்கு பற்றி எல்லாம் பல குரல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/17&oldid=855497" இலிருந்து மீள்விக்கப்பட்டது