பக்கம்:மனிதர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பிரகாரத்தில் எது எதையோ பார்த்து வியந்து வந்த புன்னைவனம் ஆகா! என்று உவகைப் பெருக்கோடு கவினார். மற்றவர்களும் கூவினார்கள். அவர் சிறு சிலை ஒன்றை அன்போடும் ஆதரவோடும் பற்றிக் கொண்டிருந்தார். மண்ணில் கிடந்து துாக்கி யெடுத்த சிலையைத் துண்டால் துடைத்துக் கொண்டிருந் த ர். அழகியின் அற்புத நயங்கள் எடுப்பாக மிளிர்ந்தன. ஆகா, என்ன அழகு! என்ன அழகு!’ எள்று கொஞ்சும் குரலில் கூறிக்கொண்டிருந்தார் அவர்.

புன்னைவனத்துக்கு ஒரு காதலி கிடைத்துவிட்டாள்:” என்று கிண்டல் பண்ணினார் ஒருவர்.

இவள்தான் அழகி. இவள் ரதி என்றார் இன் னொருவர். - - மோகினி சிலையாக இருக்கும்’ என்றார் வேறொரு நண்பர், யாராக இருந்தால் என்ன? சொக்கழகு சுந்தர் இவள்” என்று புன்னைவனம் சொன்னார். ஒகோ, கண்டதும் காதலா? இவளை நீர்விட மாட்டீர் போலிருக்கே?' என்று முதல் நண்பர் பரிகாசம் பேசினார். பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதை புறம் கொண்டு போன அர்ஜுனன் மாதிரி, இவர் இந்த மோகினியை தன்னோடு தூக்கிக் கொண்டு போவார் என் கிறீர்களோ? என்று ஒருவர் பேச, ஏன் செய்யக் கூடாது? பேஷாகச் செய்யலாமே? என்று இன்னொருவர் அங்கி கரித்தார். கமாஷாகத் தொடங்கிய எண்ணம் செயலாக முடிந்து விட்டது. ஒரு பைக்குள் திணித்து, துணிகளில் அடக்கம் செய்து, அச்சிறு சிலையை வீடுகொண்டு சேர்த்தார்கள் நண்பர்கள். புன்னைவனம் வீட்டிலேயே அது இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/38&oldid=855539" இலிருந்து மீள்விக்கப்பட்டது