பக்கம்:மனிதர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金正 சுகந்தம் இழையோடிய மென்மூச்சு அவர் முகத்தில் படுவ தாக ஒரு உணர்வு பிறந்தது. புன்னைவனம் திமிறினார். திடுக்கிட்டு, உடம்பைத் திருகி முறுக்கிக்கொண்டு நிமிர்ந்தார். பசை கொண்டு ஒட்டியதுபோல் மூடிக்கிடந்த இமைகளைத் திறந்து, கண்களைக் கசக்கிக்கொண்டு விழித்தார். பழக்கமான சூழ் நிலைதான் காட்சி தந்தது. புதுமை என்று சொல்லும்படி யாக எதுவும் பார்வைப் புலனில் தாக்கவில்லை. ஒரே அடியாக இவ்விதம் முடிவு கட்டுவதற்கு இல்லை. என்று குறுகுறுத்தது அவர் மனம். இது புதுமைதானே என்று உட்குரல் பேசியது சுவரில், உயரத்தில் , காற்றோட்டத்திற்காக இடப் பெற்றிருந்த ஒரு வட்டவடிவத் துவாரத்தின் வழியாக நில வொளி வந்து, கணக்காக சிலை அழகியை ஒளியுறுத்திக் கொண்டிருந்தது. அந்த ஒளி சிலை மோகினியின் அழகை யும் வசீகரத்தையும் மேலும் எடுப்பாகக் காட்டியது. அந்தக் கன்னி குறும்புத்தனமாகச் சிசிப்பது முன்னையவிடவும் பளிச்சென்று பட்டது. அவரைப் பார்த்துக் கண்ணைச் இமிட்டுவதுபோல்கூட அவருக்குத் தோன்றியது. பெரிய கள்ளி இவள் குறும்புக்காரி!” என்று அவர் மனம் பேசியது. கிளுகிளுக்கும் சிரிப்பொலி நிஜமாகவே அவர் செவி மடுத்தாரா? அல்லது பிரமை தானா? வெளியே இரவுப் பறவை ஏதேனும் எழுப்பிய விசித்திர ஒலியாக இருக்குமோ? அவருக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. அது சிறு பூச்சி போல் முதுகந்தண்டில் ஊர்வது போலிருந்தது. தேகம் நளுக்கிக் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/43&oldid=855551" இலிருந்து மீள்விக்கப்பட்டது