பக்கம்:மனிதர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இருவர் முயற்சியாலும் கட்டுமரம் நேராக நிமிர்ந்தது. தாகன் பாய்ந்து ஏறினான் அதன்மேலே. தண்ணீரில், அமிதந்த துடுப்புகளை எடுத்து, ஒன்றை கட்டை யில் வைத்துவிட்டு மற்றதைப் பலமாகப் பற்றினான்-சுறா அருகில் வரும், வீசி அடிக்கலாம் என்ற எண்ணத்தோடு. கட்டையில் கைகளைப் பதித்து, கால்களை நீரிலே வீசி வீசி நீந்திக்கொண்டிருந்த ஜலேந்திரன் கத்தினான். நாகா, நீ கட்டுமரத்தைக் கவனி: கரைசேர வேண்டியதைச் செய். நான் இதைக் கவனித்துக் கொள்கிறேன்.” சுறாமீன் வால் சுழற்றிப் பாய்ந்து வந்தது. அவனைக் கவ்விப் பிடித்து இழுப்பதற்காக வாய் பிளந்து வந்தது, எதிரே காத்து நின்ற மாமிசத்தின் ரத்த வாடை மனித சருமத்தையும் ஊடுருவி அதன் புலன்களைத் தாக்கி அதற்கு பசி உணர்வும் ஆசைத்தீயும் உண்டாக்கி இருக்குமோ என்னவோ! அதன் இயக்கத்தில் வேகம் சேர்ந்தது. தனது தேகத்துச் சதையிலே பதிந்துகிழிக்கத் தயாராய் வருகிற கூறிய கத்தி முனைகள் போன்ற பல்வரிசை ஜலேந்திரனை நடுக்கியது ஒரு கணம். நாகன் தன் கைத் துடுப்பைஓங்கி அறைந்தான். . அந்த அடி ஜலத்தின் மீதுதான் பட்டது. நீர் கிழிந்து அம்புபோல் பாய்ந்து விலகிவிட்டது சுறா. கரை நோக்கி வந்த அலை ஒன்று உயர்ந்து தாழ்ந்தது. அத்துடன் எழுந்து விழுந்தனர் அவர்களும். கட்டுமரம் கொஞ்சம் முன்னேறியது. ஆனால் கைப்பிடி நழுவித் தண்ணிரில் விழுந்து விட்டான் ஜலேந்திரன். அவனுடன் உறவு கொண்டாடத் துடிப்பது போல் நெருங்கி வந்தது சுறா. கொடிய சக்தியின் வலிய உயிர்ப்பு போல வந்தது அது. அவன் மனிதன். தரையில் வாழும் பிராணியான அவன் தனக்கு மாறுப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/51&oldid=855568" இலிருந்து மீள்விக்கப்பட்டது