பக்கம்:மனிதர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ζ7

  • லார் வாறேளா? ஒரே ஒரு nட் இருக்கு. அருமை யான வண்டி. நல்ல பிரஷர் கார் ரெயில் கட்டணத்துக்கு மேலே ஒரு ரூபா கொடுத்தால் போதும் ஜம்னு உட்கார்ந்து எக்ஸ்பிரஸை விட வேகமாப் போயி சிக்கிரமே நகர் சேர்ந் திடலாம்!

அவர் அருகில் வந்து இதைச் சொன்னவரின் குரல் அவரது ஆசையை தூண்டியது. சிறிது தயங்கினார். பிறகு துணிந்து விட்டார். அந்த ஆள் காட்டிய காரில் ஏறி அமர்ந்தார். காரினுள் செளகரியமாக அமர்ந்து, கார் புறப்பட்டு வேகமாக ஓடவும், அவர் நிம்மதியாக மூச்சு விட்டார். *அகிலாண்ட நாயகி, எல்லாம் உன் கிருபை என்று அவர் மனம் பேசியது, அப்போதும் குறும்பும் பரிவும் அருளும்கலந்த புன்ன’ை யோடு அவரையே பார்த்த அன்னையின் திருமுகம் அவர் உள்ளத்தில் பளீரென்று நிழலிட்டு மறைந்தது. அம்மா அகிலாண்ட நாயகி உன் அருள்' என்று மனசுக்குள் கூறிக் கொண்டார் அவர். ராமலிங்கம் இப்படி ஆத்ம பூர்வமாக அடிக்கடி எண்ணி கொள்ள வேண்டிய அவசியம் அந்தப் பிரயாண முடிவி லேயே நேரிட்டது. அந்தக் கார் அடைய வேண்டிய நகரை உரிய காலத்தில் அடைந்தது. அதில் வந்த பயணிகளுக்கு ஒரு பரபரப்பான செய்தி அங்கே காத்திருந்தது. ராமலிங்கமும் மற்றவர்களும், காலம் துணைபுரிந் திருந்தால் ஏறி பயணம் செய்திருக்கக் கூடிய- செய்திருக்க வேண்டிய- எக்ஸ்பிரஸ் ரயில் இடைவழியில் ஒரு இடத்தில் தண்டவாளம் பெயர்ந்து தடம் புரண்டு, விபத்துக்கு உள்ளாகியிருந்தது. என்ஜினும் அதை அடுத்து இரண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/79&oldid=855615" இலிருந்து மீள்விக்கப்பட்டது