பக்கம்:மனிதர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3葛 சாமி ஒரு புலவர்னும் சொல்லலாம். இவன் சொந்தமாப் பாட்டுகளை இட்டுக் கட்டிப் பாடுவான்' என்று ராமையா கூறினார்.

புலவர் தோட்ட வேலையும் சில்லறை வேலைகளும் செய்து வேலைக்காரன் மாதிரி பிழைப்பு நடத்த வேண்டி யிருக்குதே! ஆச்சர்யம்தான். சொக்கலிங்கத்தின் வியப்பு குறைவதாயில்லை.
  • கடவுளே இந்த ஊரில் ஏவலாளாராக இருந்து சகல வேலைகளும் செய்திருக்காரு தெரியுமா? ஒருவன் பேரு கடவுள்னு இருந்தது. எல்லாரும் ஏ. கடவுள்னுதான் அவனைக் கூப்பிட்டாங்க. அவன் நிலாக் காலத்திலே பலின் சடுகுடு ஆட்டத்திலே பிரமாதமா விளையாடுவான். ஏ கடவுள், விடாதே! அப் கடவுள், அப் அப்!... கடவுளை அமுக்கிப் புடின்னு உற்சாகிகள் கூச்சல் போடுவாங்க. தமாஷா இருக்கும்’ என்று ராமையா சுவாரஸ்யமாக விவ ரித்தார்.

கறுப்பசாமிக்கு புலவர்னு பட்டப் பேரு எப்படி வந்தது? அந்தப் பேரை அவனுக்குச் சூட்டினதே நீங்க தானோ? என்று கேட்டார் சொக்கலிங்கம். அந்தப் பெருமை என்னைச் சேராது, நண்பரே! அது அவனுக்குக் குலப்பெயராக வந்து சேர்ந்திருக்கு, அவன் அப்பா சுப்பையாவும் புலவர் தான். இவன் தாத்தா கறுப் பண்ணனும் புலவராகத்தான் இருந்தாரு. இப்படி தலை முறை தலைமுறையா வளர்ந்து வரும் புலவர் வமிசத்தின் இன்றையக் குலக் கொழுந்து இந்தக் கறுப்பசாமி.” ராமையா இந்தக் குலமுறை கிளத்துப் படல"த்தோடு நின்று விடவில்லை.

புலவர், இங்கே வாய்யா' என்று கூப்பிட்டார். ஐயா

வுக்கு உன் திறமையைக் கொஞ்சம் காட்டேன். நீ கட்டிய பாட்டுகளை அவிழ்த்து விடு’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/97&oldid=855638" இலிருந்து மீள்விக்கப்பட்டது