பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

15


எப்படியோ, பெண்களால் தான் எல்லோரும் கெட்டாள்கள்! ஏவாள்தானே ஆதாமைக் கெடுத்தாள்!

துணையாக வந்தவளை வழிநடத்தி அழைத்துக் செல்ல வேண்டிய ஆதாம், அவள் அறிவுரையைக் கேட்டபொழுது அல்ல, சிந்திக்காது நடந்த போது தான் அனர்த்தம் ஏற்பட்டது. அறிவு இருந்து என்ன பயன்? பயன்படுத்த வேண்டாமா?

வாழ்க்கையை மகிழ்விக்க வருபவளைத்தாள் துணைவி என்கிறார்கள். மனையில் வாழ வந்ததால்தான் மனைவி என்கிறார்கள். மனைவி என்று கூறுகிறோமே, அதற்குப் பொருள் தெரிகிறதா?

வாசு பேசாமல் இருந்தான்.

மனைவி என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது 'வி என்ற எழுத்தை நாம் நம்மையறியாமலேயே 'வீ' என்று ஈகார ஒலியால் தானே சொல்கிறோம். அந்த 'வீ' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

வாசு நிமிர்ந்து அவர் முகத்தையே பார்த்தான். மலரின் நிலையை விளக்கிட வந்த புலவர்கள், செடியில் தோன்றத் தொடங்கியதை அரும்பு என்றார்கள். முளைத்து முட்டிக்கொண்டு வருவதை மொட்டு என்றார்கள். தேன், மணம், நிறம் எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வர, பொழுது பார்க்கிறது. அது என்பதால், அதனை 'போது' என்றார்கள். காலம்பார்த்து மலர்ந்ததை 'மலர்' என்றார்கள். மலர்ந்த மலரை சிறிது நேரம் கழித்து 'வி'என்றனர்.

அதுபோலவே, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, பேரிளம்பெண் என்று பெண்ணின் நிலையையும் ஏழு வகையாகப் பிரித்துப் பாடியிருக்கிறார்கள். உடலால் மலர்ந்திருந்து வாழ்க்கையாகக் காத்திருந்து