பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


தங்களது அன்பை வெளிப்படுத்தவே தேவைப்படுகிறது என்பது அரிய உண்மை என்றே உடலியல் அறிஞர்கள் நிதமும் உரைக்கின்றனர்.

காதல் உறவின் உடல்உணர்வு என்பது, உடலில் உள்ள சுரப்பிகளிலிருந்து ஏற்படுகின்ற அதிசயமான ஹார்மோன்களினால் உசுப்பப்படுவதால் விளையும் தேவையாகும் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு எழுப்பப்படுகின்ற உணர்வுகளால், உணர்வுப் பசியால் தேடிய உடல் உறவைப் பெற்று. அந்தச் சுக உறவு உணர்வு முடிந்து அவிந்தவுடன், தான் பெறுகிற திருப்தியோடு ஆனந்தமடைந்து கொள்வது மட்டுமல்ல. தனது பங்குதாரராக இருந்து தனக்கு உதவியவரை சிறிதும் நன்றியுணர்வோ அன்போ இல்லாமல் உடனே மறந்து விடவும். ஒதுங்கிக் கொள்ளவும், பிரிந்து போகக் கூடிய மனநிலையயும் அளிப்பது இந்த உடல் உறவு உணர்வு என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மனித வாழ்வுக்கு உடல் உறவு தேவைதான் அது, தனது ஏதோ ஒருவித உடல்நிலை வெளிப்பாட்டுக்காகவும், மனத் திருப்திக்காகவும் தான் உதவுகிறது என்பதை மட்டும் அறிந்து கொண்டால், உனக்கு உடல் உறவு பற்றிய உண்மை நிலை புரியும்.

அப்படியென்றால், காதல் உணர்வும், பால் உணர்வும் நிச்சயம் எல்லோருக்கும் வேண்டும் என்கிறீகளா? ஆமாம்! காதல் உணர்வும், பால் உணர்வும் நல்லதைவிட நயம் நிறைந்தது. உண்மையைவிட வலிமையானது. மதிப்பு மிக்கப் பொருட்களை விட கவர்ச்சி

உடையது.