பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
27
 


எனவேதான், இந்த அடிப்படையான உணர்வைக் தாக்கவும், அத்தியாவசிய உறவுக்காகவும், அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்வுக்காகவுமே வாழ்க்கையில் திருமணம் நடைபெறுகிறது. நடத்தப்பெறுகிறது.

திருமணம் ஏன் என்று புரிகிறது. ஆனால் என் சந்தேகத்தைத்தான் இன்னும் கேட்கவில்லை என்ற பீடிகையுடன் உலகநாதரின் முகத்தைப் பார்த்தான் வாசு. உலகநாதர் அவன் கேள்விக்குப் பதில் தருவதற்குத் தயாராக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

'முதலில் பெண்ணைப் புரிந்து கொள்ள வேண்டும்! அது தான் எனக்கு கவலையாயிருக்கிறது என்றான் வாசு. பெண்ணையா? புன்சிரிப்புடன் கேட்டாள் உலகநாதர். இந்தப் பாலைக் குடி! பிறகு சொல்கிறேன் என்றாள். தன் பக்கத்தில் வைக்கப்பட்ட பால் டம்ளரை எடுத்துக் குடித்தான் வாசு.

பிறகு அவர் முகத்தை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

உலகநாதர் நிம்மதியாக சுவைத்துப் பாலை பருகிக் கொண்டிருந்தார்.