பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(பதிப்புரை) விளையாட்டுத்துறை இலக்கியத்தின் தந்தை என்றும், பல்கலைப் பேரறிஞர் என்றும் பாராட்டப்படுகின்ற, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள், விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான பணியைத் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பணியாற்றினார். த ரு மூலர் , த ருவ ள் ளுவர் , வள் ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் விளையாட்டுத்துறை இலக்கியப்பணியை புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி தொலைக்காட்சி மூலமாக நாற்பது ஆண்டுகளாக செய்து வந்தார். விளையாட்டு பற்றிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள், நாவல் மற்றும் தனி மனித முன்னேற்றம் பற்றிய பொது அறிவு நூல்கள், ஆய்வு நூல்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறாள். முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலக நல்ல அனுபவத்துடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களோடு இந்நூலை எழுதியுள்ளார். 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றார் கவியரசு கண்ணதாசன்.