பக்கம்:மனை ஆட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

 20

மூன்றாம் காட்சி

இடம். சாஸ்திரியார் வீட்டின் கூடம்

காட்சி. ஆரம்ப மாகும்பொழுது பார்வதியும் சகுந்தலாவும் ஏதோ தங்களுக்குள் கேலிபண்ணிக் கொண்டி துந்ததுபோல் காணப்படுகின்றனர்.

பா. (உற்றுக் கேட்டு) அதோ! உன் தகப்பனார் வருகிறார்! -படுத்துக்கொள்.

ச. ஆமாம் அம்மா-ஆயினும் நான் அப்பாவுடன் பேசக் கூடாதா ? கூடாது

பா. -வாயை மூடு -அதோ (இருவரும் படுத் துக்கொண்டு போர்வைகளைப் போர்த்திக் கொள்கின் றனர்) தாமோதர சாஸ்திரி மெல்ல வருகிறார்.

(சாஸ்திரியார் அருகில் வரும்போது அவர்கள் மிகுந்த பாதை அனுபவிப்பதுபோல் பெருமூச்சு விடுகின்றனர்)

தா. ஹூம் -இது எப்பொழுது முடியப் போகிறது ?

பா. முடிவா ? சீக்கிரமே முடிந்துவிடும் பயப்படாதீர்கள். இன்றிரவு கழியும் வரையில் நாங்கள் பிழைத்திருக்க எங்களுக்குச் சக்தியில்லை என்று நினைக்கிறேன்.நமக்கு சக்தி யிருக்கிறதா சகுந்தலா ?


ச. அது ஸ்வாமிக்குத்தான் தெரியும் அம்மா.

தா. சகுந்தலா, துர்அதிர்ஷ்டம் வாய்ந்த பெண்ணே, நீயும் உன் தாயாருடன் கலந்து கொண்டாயா இதில்-உன் முழுமனதுடன் ?


ச. நான் என்ன செய்தேன் அப்பா ?


தா. எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு, நீங்கள் ஆளப் பார்க்காதீர்கள் தயவுசெய்து, இது அரசாட்சி யல்ல - மனையாட்சி ; தாயாரையும் மகளையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது-முடியுமா சகு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/24&oldid=1415108" இலிருந்து மீள்விக்கப்பட்டது